.இந்து மத பிரிவுகள்

இந்து மதத்தில்  ஆறு பிரிவுகள் உள்ளன.

1.   சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

2.   வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்

3.   சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

4.   காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

5.   கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

6.   சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில்ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாகஇருக்கின்றது 

  . பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா,

மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.

ஆகக் குறைந்தது, கி.மு 1700 ( அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே உள்ளதாக ) ஆண்டுக்கு அணித்தான வேதகாலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது.( சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள்,ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது).

முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.

ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.